TOC

This article is currently in the process of being translated into Tamil (~89% done).

Introduction:

What is MVC?

மாதிரி-பார்வை-கட்டுப்படுத்தி ( சுருக்கமாக மா.பா.க (MVC) ) ஆனது 1970 களில் வரைகலை பயனாளர் இடைமுகம் மிகவும்( graphical user interfaces -GUI) ஆரம்ப கட்ட மேம்படுத்தலில் இருக்கும் பொழுது அசலாக மேம்படுத்தப்படுத்தப்பட்ட மென்பொருள் வடிவமாகும். மா.பா.க (MVC) ஆனது ஒரு செயலியை 3 பிரிவுகளாக பிரிக்க பிரிக்க முனைகின்றது . அதாவது :

மாதிரி (Model)

This is where data and business logic is stored. In a typical web application, this part of the application would represent e.g. a database table or any other object that your application should deal with.

பார்வை (View)

உங்கள் மாதிரியின் உண்மையான காட்சியின் பிரதிநிதித்துவம் பார்வை (view) ஆகும். வழமையான இணைய செயலிகளில் பயனாளருக்கு, தரவை உள்ளிடும் படிவம் அல்லது தரவின் வெளியீடு அல்லது இரண்டும் சேர்ந்ததை போன்ற மாதிரியை காண்பிக்கும் பக்கமாக இருக்கும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் பார்வை மாதிரியின் அனைத்து பகுதிகளையும் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை மற்றும் ஒரு மாதிரிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பார்வைகள் இருக்கலாம்.

கட்டுப்படுத்தி (Controller)

கட்டுப்படுத்தி ஆனது உங்களுடைய பார்வைக்கும் மாதிரியிக்கும் இடையிலான அனைத்து தொடர்பாடலையும் கையாளவேண்டும் . வழமையான இணைய செயலிகளில் ஒரு பக்கம் ஏறும் போது அல்லது ஒரு பொத்தானை அழுத்தும் போது கட்டுப்படுத்தியின் செயல்முறைகள் (methods) பயனாளரால் செயற்பட தூண்டப்படுகின்றன. கட்டுப்படுத்தி ஆனது தேவைப்படுமிடத்து மாதிரியின் தரவுகளைப் புதுப்பிக்கும் மற்றும் புதிய பார்வையைக் கொண்டுவரும்(அல்லது செயல், ஆனால் அதைப் பற்றி பிறகு மேலும் தெரிந்துகொள்ளலாம் ).

மா.பா.க(MVC)இன் வளர்ச்சி

மா.பா.க (MVC) வடிவமானது 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அதிகளவிலான கவனிப்பைப் பெறவில்லை. பேர்ல்(Perl), பிஎச்பி (PHP) மற்றும் எஎஸ்பி கிளஸிக் (ASP Classic) போன்ற ஆரம்ப இணைய மொழிகள் வடிவமைப்பு வடிவங்களில் (design pattern) கவனம் செலுத்தவில்லை மற்றும் ஏஎஸ்பி.நெட் (ASP.NET) இன் வெளியீட்டிலும் கூட மா.பா.க (MVC) அதனுடைய பகுதியாக ஒன்றிணைக்கப்படவில்லை. உங்களுடைய வேலை திட்டங்களுக்கு மா.பா.க (MVC) நுட்பங்களை செயற்படுத்த கட்டாயம் முடியும். இருந்தும் எந்த ஒரு பிரபலமான கட்டமைப்புகளும்(Frameworks) அதை ஊக்குவிக்கவில்லை .

2004 ஆம் ஆண்டில் அதிகளவில் மா.பா.க (MVC) வடிவத்தைக் கொண்டு ரூபி மொழியில் ஒரு இணைய மேம்படுத்தல் கட்டமைப்பான ரெயில்ஸில் ரூபி கட்டமைப்பை(Framework) வெளியிட்டது. பல மக்கள் இது மீண்டும் கவனம் பெற இது தான் வைத்ததாக நம்புகின்றனர். சிறிது காலத்துக்குப் பின் பல பிஎச்பி(PHP) கட்டமைப்புக்கள் (Framework) மா.பா.க (MVC) வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்து மா.பா.க (MVC) வினை பெரிதும் பிரபலப்படுத்தியது. இதன் விளைவாகவே மைக்ரோசாப்ட் நிறுவனமானது தங்களுடைய விசுஅல் இஸ்டூடியோ ஐடீஈ (Visual Studio IDE[ஒன்றிணைக்கப்பட்ட மேம்படுத்தல் சுற்றாடல் ]) வில் பாரிய கருவிகளுக்கான துணையை உள்ளடக்கிய .நெட் (.NET) கட்டமைப்பில் அதற்கான செயல்படுத்தலை செய்ய முடிவெடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏஎஸ்பி.நெட் (ASP.NET) மா.பா.க (MVC) 2007 இல் வெளியிடப்பட்டிருந்தாலும் அதன் முதல் இறுதிப் பதிப்பானது 2009 ஆண்டு வெளியிடப்படும் வரை முதலில் பொதுவாக அறியப்படவில்லை.

இனி வரும் பாடப்பகுதிகளில் ஏஎஸ்பி.நெட் மா.பா.க (ASP.NET MVC) என்பன என்ன என்பதையும் , மற்றும் அதன் மாற்றுக்கள் , முக்கியமாக ஏஎஸ்பி.நெட் இணையப்படிவங்கள் (ASP.NET WebForms) எவ்வாறு அதனோடு ஒப்பீட்டளவில் இருக்கப்போகின்றது என்பதனை ஆழமாகப் பார்ப்போம்.


This article has been fully translated into the following languages: Is your preferred language not on the list? Click here to help us translate this article into your language!